Government Arts and Science College, Kudavasal
About M.G.R

டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்:

மருதூர் கோபால்மேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கமே எம்.ஜி.ஆர் என்பதாகும்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் கோபால் மேனன் - சத்தியபாமா இணையரின் மகனாகப் பிறந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

நாடகம் மாற்றும் திரைப்படத்துறையில் திறம்படப் பங்கேற்று மக்களின் ஏகோபித்த நல்லாதரவுடன் அரசியலில் நுழைந்து 1997 முதல் 1987 வரை தமிழகத்தின் முதலமைச்சராக நற்பணியாற்றியவர்.

சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் பலவற்றை ஆற்றியதும், உலகத்தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவற்றை நிறுவியதும் இவரது சாதனைகள்.

மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்று பலவாறாகப் பேரன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி .ஆருக்கு, சென்னை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. மத்திய அரசின் சார்பில் இறப்புக்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது நமது கல்லூரிக்கு டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டது