Government Arts and Science College, Kudavasal

The Emblem

கல்லூரியின் சின்னம் விளக்கம்:

மேற்கு வாயில் என்ற பொருளிலான குடவாயில் என்ற இவ்வூரின் பெயரை நினைவுபடுத்தும் வண்ணம் தோரண வாயில் போன்றதொரு வளைவில் இக்கல்லூரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

பொன்னிற நெற்கதிர்கள், இம்மண் பொன்னியின் கிளை நதிகள் பாய்ந்து வளங்கொழித்து மண்ணைப் பொண்ணாக்கிச் “சோழநாடு சோறுடைத்து” என்ற பெருமைப்பட்டிருந்த பெருமையைப் பறைசாற்றுகிறது.

ஓலைச்சுவடி, இவ்வூர் சங்க காலத்தில் சிறந்து விளங்கிய ஊராக விளங்கியதைக் குறிப்பிடுகிறது. மேலும் பழந்தமிழர் இசைக்கருவியாகிய யாழ் மற்றும் பாரம்பரிய பாரக் கலைஞர்களின் நடனம் ஆகியன முத்தமிழாகிய இயல், இசை, நாடகம் சிறந்து விளங்கிய தமிழகக் கல்வி கலை விழுமியங்களைக் குறிப்பதாக அமைகிறது.

விரித்து வைக்கப்பட்ட நூலில் எழுதப்பட்ட “கற்கை நன்றே” என்ற விருது வாசகம் பழந்தமிழ்ச் சான்றோர் கூற்றைப் பொன்னே போல் போற்றுவதாகவும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்துவதாகவும் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசு இக்கல்லூரியைத் தொடங்கியதைக் குறிக்கும் விதமாக, தமிழக அரசின் கோபுரம் சின்னம் இடம்பெற்றுள்ளது.