Government Arts and Science College, Kudavasal

A BRIEF HISTORY OF THE COLLEGE !

About the College

கல்லூரியின் வரலாறு


குடவாயில் என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஊர் குடவாசல் ஆகும். இவ்வூர் திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் வட்டத்தலைநகரம். நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி. குடவாசல் அருள்மிகு கோணேஸ்வர சுவாமி திருக்கோயில் சைவ சமயக்குரவர் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் திருத்தலமாகும். இக்கோயிலைச் சோழன் கோச்செங்கணான் ஆணையேரா எழில்மாடக் கோயிலாக அமைத்தான் என்று கூறுவார். இவ்வூரில் உயர்கல்விக்கூடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான மாண்புமிகு இரா. காமராஜ் அவர்களின் இடையறா பெருமுயற்சியின் விளைவாக, தமிழக அரசு, அரசாணை நிலை எண் 199 (உயர்கல்வி ஜி1 துறை) நாள் 24/07/2017 இதன் வழி இக்கல்லூரியை தொடங்க அனுமதி அளித்தது.

...

28/07/2017 வெள்ளிகிழமையன்று மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் முறைப்படி, குத்துவிளக்கு ஏற்றி இக்கல்லூரியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. இல. நிர்மல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கோபால். அவர்கள் முன்னிலை வகிக்க தஞ்சை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் இரா.மனோகரன், அவர்கள் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர், அ.ஜான்பீட்டர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 3 கூடுதல் கட்டிடங்களில் தற்காலிகமாக இக்கல்லூரி செயல்படுகிறது. தமிழக அரசு இக்கல்லூரிக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.7 கோடியே 97 லட்சம் 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

இக்கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம் வணிகவியல், கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 213 மாணவ மாணவியர் 2017-18 ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவு இணைவு இக்கல்லூரிக்குப் பெறப்பட்டு (பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களின் கடிதம் பார்வை எண் 1616/3/2017 நாள் 09/11/2017) பல்கலைகழகத் தேர்வுகள் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கே.கோபால் அவர்களின் தொகுதி வளர்ச்சித்திட்ட நிதி உதவியில் இக்கல்லூரியின் மாணவர்களுக்கான இருக்கை தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது நமது கல்லூரிக்கு டாக்டர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டது